பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் |

தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் தனக்கென தனிப்பெரும் இசை ரசிகர்களை வைத்திருப்பவர் இளையராஜா. தற்போது தெலுங்கில் 'சஷ்டிபூர்த்தி' என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். பவன் பிரபா இயக்கத்தில் ரூபேஷ், ஆகான்ஷா, ராஜேந்திர பிரசாத், அர்ச்சனா மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் மே 30ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.
இப்படத்தின் மூன்றாவது பாடலான 'ராத்ரன்த ரச்சே' என்ற பாடல் நேற்று யு டியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா, நித்யஸ்ரீ வெங்கட்ரமணன் பாடியுள்ளனர்.
தெலுங்கில் இதற்கு முன்பு யுவன்ஷங்கர் ராஜா பாடியிருந்தாலும், தனது அப்பா இளையராஜா இசையில் தெலுங்கில் பாடிய முதல் பாடல் இது. அப்பாவையும், மகனையும் தங்களது படத்தில் இசையால் இணைத்ததற்கு படக்குழுவினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தப் படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி ஒரு பாடலை எழுதியுள்ளார்.




