அம்மா, தங்கச்சி வேடங்களில் சுவாசிகா | ஒரு படத்துக்கு 5 இசையமைப்பாளர்கள் | மீண்டும் ஒரு ‛ஜென்ம நட்சத்திரம்' : 6 மணி 6 நிமிடம் 6 நொடியில் வெளியான தலைப்பு | தயாரிப்பாளர்களை கண்டித்து: பெப்சி ஒரு நாள் வேலை நிறுத்த அறிவிப்பு | 'மையல்' நாயகிக்கு அழகும், அம்சமும் இருக்கிறது : கே.எஸ்.ரவிகுமார், ஆர்.வி.உதயகுமார் பாராட்டு | தலைப்பு பிரச்னை : சந்தானம் படத்திற்கு தடை கேட்டு வழக்கு | பிளாஷ்பேக்: வில்லன் வேடத்தால் சினிமாவை விட்டு விலகிய கராத்தே மணி | பிளாஷ்பேக் : 75 வருடங்களுக்கு முன்பே 'டைம் டிராவல்' | தனுஷ், விக்னேஷ் ராஜா படப்பிடிப்பு எப்போது துவங்குகிறது | அண்ணன் சூர்யாவிற்கு வழிவிடும் தம்பி கார்த்தி |
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை ராணுவம் எடுத்து வருகிறது. அதோடு மத்திய அரசு பாகிஸ்தான் சார்ந்த பல்வேறு விஷயங்களுக்குத் தடை விதித்தும் வருகிறது. அதனடிப்படையில் பாகிஸ்தான் சார்ந்த நிகழ்ச்சிகள், வெப்சீரிஸ், பாடல்கள், பேட்டிகள் ஆகியவற்றை தேசிய பாதுகாப்பு கருதி உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பயங்கரவாதத்திற்கு எதிரான 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு சினிமா, டிவி உள்ளிட்ட கலைஞர்கள் பெரும் ஆதரவு அளித்து வருகிறார்கள். தமிழ் சினிமா பிரபலங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏஆர் ரகுமான் உள்ளிட்ட பலரும் இது குறித்த தங்களது ஆதரவையும் பாராட்டுக்களையும் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்கள்.
பாகிஸ்தான் சார்ந்த சமூக வலைத்தளங்கள் பலவற்றிற்கும் ஏற்கெனவே இந்தியாவில் தெரியாதவாறு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஓடிடி தளங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதோடு சில செய்தி சேனல்களில் வெளியாகும் போலியான செய்திகளின் மீதும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.