லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கிட்டத்தட்ட 1000 கோடி வசூலை நெருங்கி வெற்றி படமாக அமைந்தது. இதற்கு முன்னதாக தொடர்ந்து பிரபாஸின் படங்கள் வரவேற்பு பெறாத நிலையில் கல்கி படத்தின் முதல் பாகத்திற்கான வெற்றி பிரபாஸை உற்சாகப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சீதா ராமம் பட இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் பிரபாஸ்.
பீரியட் படமாக அதேசமயம் காதலை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக கதாநாயகியாக யார் நடிக்கப் போகிறார்கள் என ஒரு பக்கம் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் இயக்குனரின் முந்தைய படமான சீதா ராமம் நாயகி மிருணாள் தாக்கூரே இதிலும் நாயகியாக நடிப்பார் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் மிருணாள் தாக்கூருக்கு பதிலாக பாகிஸ்தான் நடிகை சஜல் அலி என்பவர் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்று தற்போது ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது.