பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து | விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம் | ஜெயிலர் 2வில் போலீஸ் வேடத்தில் பாலகிருஷ்ணா | கல்வி தான் ஏணிப்படி... எங்க குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகப் போறான் : மகன் குறித்து முத்துகாளை உருக்கம் | தேசிங்குராஜா 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானைத் தோற்கடித்தது. முன்னணி வீரரான விராட் கோலி ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் அடித்தார். அவரது ஆட்டத்தை பாகிஸ்தான் ரசிகர்களும் ரசித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
பாகிஸ்தான் நடிகையான மாயா அலி என்பவர் விராட் கோலி சதமடித்த வீடியோவைப் பகிர்ந்து, “அவருக்கு மிகப் பெரிய மரியாதை… ராஜா என்பதற்கான காரணம்”, எனக் குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலியின் ஆட்டத்திற்கு பாகிஸ்தான் நாட்டில் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். அங்குள்ள நடிகை ஒருவர் விராட்டைப் புகழ்ந்து பதிவிட்டது இந்திய ரசிகர்களாலும் பகிரப்பட்டு வருகிறது.