'பராசக்தி' படப்பிடிப்பு விரைவில் மீண்டும் ஆரம்பம்? | விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்துக்கு யு/ஏ சான்றிதழ்! | 'டி என் ஏ'வை ஐஸ்வர்யா ராஜேஷ் பாராட்டியது ஏன் | விக்ரம்பிரபு பட விழாவில் ஆதிக்ரவிச்சந்திரன் | 'பறந்து போ' படத்திற்காக யுவன் சங்கர் ராஜா பாடிய பாடல் ஜூன் 24ல் ரிலீஸ்! | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்தில் கூலாக இருந்த விஜய்! - மமிதா பைஜூ சொன்ன தகவல் | கமலிடம் நஷ்ட ஈடு கேட்கும் 'தக்லைப்' படத்தின் கர்நாடக விநியோகஸ்தர்! | 50வது நாளில் 'டூரிஸ் பேமிலி' | பி.எம்.டபிள்யூ எக்ஸ்-1 காரை வாங்கிய நடிகர் விதார்த்! | தனி விமானம் வாங்கினாரா சின்னத்திரை நடிகை? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா. அதேபோல், நடிகர் தனுஷ் உடன் இணைந்து 'குபேரா' படத்திலும் நடித்து வருகிறார்.
இவரது 100வது படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக எழுந்து வந்த நிலையில், தற்போது தமிழ் இயக்குனர் ஒருவர் பட்டியலில் முந்தியுள்ளார். அசோக் செல்வன் நடித்த 'நித்தம் ஒரு வானம்' படத்தை இயக்கிய ரா.கார்த்தி இயக்கத்தில் நாகார்ஜூனாவின் 100வது படம் உருவாகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தமிழ், தெலுங்கு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே, தனுஷ், சூர்யா, கார்த்தி என தமிழ் நடிகர்கள் தெலுங்கு இயக்குனர்களின் படங்களில் நடித்து வரும் சூழலில், தெலுங்கு நடிகர், தனது 100வது படத்திற்கு தமிழ் இயக்குனரை தேர்ந்தெடுத்துள்ளது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.