பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து, வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. அஜித் நடித்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக இந்த படம் அமைந்தது. இந்தப்படம் ஓடிடி தளத்தில் எப்போது வெளியாகும் என கேள்விகள் எழுந்தது. அந்த வகையில் நமக்கு கிடைத்த தகவலின்படி வருகிற மே 8 அல்லது 09 அன்று நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகுமென்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த சந்தோசத்தில் உள்ளனர். தியேட்டர்களில் பார்க்க தவறியவர்கள் ஓடிடியில் பார்க்கலாம். திரையரங்கை போலவே ஓடிடி தளத்திலும் வரவேற்பை பெரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது ஓடிடி நிறுவனம். இந்த திரைப்படத்தை சுமார் 95 கோடிக்கு ஓடிடி உரிமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.