நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் |

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து வெளியான டிராகன் படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்து தமிழில் அறிமுகமானவர் கயாடு லோஹர். முதல் படமே அவருக்கு வெற்றியை கொடுத்ததோடு, அவரது நடிப்பும் இளவட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டதால் கோலிவுட்டில் கவனிக்கப்படும் நடிகையாகி இருக்கிறார். தற்போது அதர்வாவுக்கு ஜோடியாக இதயம் முரளி என்ற படத்தில் நடித்து வரும் அவர், அடுத்து சிம்பு நடிக்கும் 49 வது படத்தில் நடிக்கப் போகிறார்.
ஒரு பேட்டியில் யாருடன் இப்போது நீங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறீர்கள்? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ‛‛எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். என்றாலும் ஹாய் சொல்லும் அளவுக்கு தான் நட்பு வைத்திருக்கிறேன். தேவை இல்லாமல் சுற்றிக் கொண்டு திரியும் ரிலேஷன்ஷிப்பை நான் யாரிடத்திலும் வைத்துக் கொள்வதில்லை. அத்தனை சீக்கிரத்தில் நான் யாரிடத்திலும் சிக்கிக் கொள்ளவும் மாட்டேன். இன்றைக்கு ஒரு ஆண் நண்பர் உடன் சாதாரணமாக நட்பு வைத்தாலே அதற்கு பலதரப்பட்ட அர்த்தம் கண்டுபிடித்து விடுகிறார்கள். அதனால் யாருடனும் எப்படிப்பட்ட ரிலேஷன்ஷிப்பிலும் நான் இல்லை. நான் உண்டு, என் வேலை உண்டு என்று மட்டுமே இருக்கிறேன்'' என தெரிவித்திருக்கிறார் கயாடு லோஹர்.




