தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
அட்டகத்தி தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிப்பில் 2014ல் வெளிவந்த படம் 'திருடன் போலீஸ்'. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு படம். அப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் ராஜு. அதற்கு முன்னதாக பல வெற்றிப் படங்களில் விஷுவல் எபெக்ட்ஸ் சூப்பர்வைசர் ஆகப் பணியாற்றியவர்.
'திருடன் போலீஸ்' படத்திற்குப் பிறகு 2017ல் 'உள்குத்து' படத்தை இயக்கினார். அந்தப் படம் சரியாகப் போகவில்லை. அதன்பின் தெலுங்குப் பக்கம் போய்விட்டார். 'நினு வீடனி நீடனு நீ, நேநே நா' ஆகிய படங்களை இயக்கினார்.
மூன்றாவது தெலுங்குப் படமாக தற்போது 'சிங்கிள்' படத்தை இயக்கி முடித்துள்ளார். அல்லு அர்ஜுன் குடும்பத்திற்குச் சொந்தமான கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் ஸ்ரீவிஷ்ணு, கீத்திகா சர்மா, இவானா மற்றும் பலர் நடித்துள்ளனர். காதல், காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தை மே 9ம் தேதி வெளியிட உள்ளார்கள். இப்படத்தின் டிரைலரை சற்றுமுன் வெளியிட்டுள்ளார்கள்.