'ரெட்ரோ' : ரெமான்ஸ் படமாம், ஆக்ஷன் படம் இல்லையாம்… | ககொ ககொ - கா கா, விரைவில் ரீ ரிலீஸ் | 'தொடரும்' வரவேற்பு : மோகன்லால் அன்புப் பதிவு | நானிக்காக அனிருத் பாடிய தானு பாடல் வெளியீடு | பீனிக்ஸ் வீழான் ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் | கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | விஜய் சேதுபதியுடன் மோதும் பஹத் பாசில் | சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பு எப்போது | இட்லி கடை படத்தின் அப்டேட் தந்த அருண் விஜய் | மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம் |
நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார் .இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது எட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இதனை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இது சூர்யாவின் 46 படமாக உருவாகிறது.
ஏற்கனவே இதில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார் என கூறப்பட்டது. இப்போது இதில் மற்றொரு கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் உடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு வருகின்ற மே 15ம் தேதி அன்று துவங்குகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற நாட்களில் வெளியாகும் என்கிறார்கள் .