ஜில்லுனு ஒரு காதலை ஞாபகப்படுத்தும் 'சூர்யா 46' பட போஸ்டர் | மீண்டும் நடிக்க வருகிறார் அப்பாஸ் | கேரளாவில் படமான சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் | தனுஷ் பட கிளைமாக்சை மாற்ற இயக்குனர் எதிர்ப்பு | இளையராஜா பெயரை நீக்கிய வனிதா | மீண்டும் கதை நாயகியான சுவாசிகா | மாரீசனுக்காக வடிவேலு ‛வெயிட்டிங்' | தமிழில் முதல் ஏஐ தொழில்நுட்ப இசை ஆல்பம் | ‛ஜென்ம நட்சத்திரம்' நிறைய சொல்லிக் கொடுத்தது : தமன் | பிளாஷ்பேக்: இதய கோவிலை இயக்கியதற்காக வருந்திய மணிரத்னம் |
விஜய், ஜெனிலியா நடித்து தாணு தயாரித்த திரைப்படம் 'சச்சின்'. இந்த திரைப்படம் 2005 ஆண்டு திரையரங்கில் வெளியானது. அப்போது ரஜினியின் சந்திரமுகி படத்துடன் போட்டியிட முடியாமல் தோல்வியடைந்தது. இப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் மூன்று நாட்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் விடுமுறை நாட்கள் முடிந்து வேலை நாட்கள் வரும்போது இந்த திரையரங்கில் பெரிதளவில் கூட்டம் இல்லை என்பதே பொதுவான கருத்தாக நிலவுகிறது. இருந்தாலும் இந்த வாரம் இறுதியில் மீண்டும் ரசிகர்களின் கூட்டம் படை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.