மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

விஜய், ஜெனிலியா, வடிவேலு மற்றும் பலர் நடிப்பில் ஜான் இயக்கத்தில் 2005ல் வெளியான 'சச்சின்' படம் கடந்த வாரம் ரீ-ரிலீஸ் ஆனது. 2கே கிட்ஸ் இந்தப் படம் வந்தபோது குழந்தையாக இருந்து பாடல்கள் மட்டும் பார்த்து ரசித்திருப்பார்கள். டிவியில் படம் ஒளிபரப்பாகும் போது பெரிதாகக் கண்டுகொள்ளாமல் போய் இருப்பார்கள். படம் வெளிவந்த அந்தக் காலத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'சந்திரமுகி' படம் 'சச்சின்'ஐ சந்தடியில்லாமல் செய்துவிட்டது.
இப்போது ரீரிலீசில் 2கே கிட்ஸ் பலரும் படத்தைப் பார்த்து ரசித்து வருகிறார்கள். கதாநாயகி ஜெனிலியாவுக்கு தோழியாக நடித்த ஒரு பெண்ணைப் பார்த்து யார் இவர் என ரசிகர்கள் தேடி ஆரம்பித்தார்கள். அதற்குள்ளாக அந்த தோழி நடிகை ரஷ்மி முரளி, தான் யார் என்று ஒரு வீடியோவை வெளியிட்டு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
கதாநாயகியாக யார் நடித்திருந்தாலும், அவருடன் இருக்கும் தோழிகளையும் சேர்த்தே ரசிப்பார்கள் நமது ரசிகர்கள். ரஷ்மி இப்போது திருமணமாகி, குழந்தைகளுடன் வெளிநாட்டில் வசித்து வருகிறாராம். 2 கே கிட்ஸ்களைப் பொறுத்தவரையில் ரஷ்மி இன்றைய இளம் பெண் அல்ல, அன்றைய இளம் பெண். அதனால், அவரை 'ஆன்ட்டி' என்று அழைப்பதுதான் சரி. எதற்கு வம்பு, ரஷ்மி என்றே அழைத்துக் கொள்ளுங்கள், இல்லையென்றால் சிம்ரன்கள் கோபித்துக் கொள்வார்கள்.