லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திற்கு பின் நடிகர் தனுஷ் இயக்கி வரும் படம் 'இட்லி கடை'. இதில் அவரே நாயகனாகவும் நடிக்கிறார். நாயகியாக நித்யா மேனனும், முக்கிய வேடத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், ஷாலினி பாண்டே ஆகியோரும் நடிக்கின்றனர். 'டான் பிக்சர்ஸ், வுண்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.
இதன் படப்பிடிப்பு 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. தற்போது மீதமுள்ள காட்சிகளை படமாக்க பாங்காக் செல்கின்றனர். பார்த்திபன், சத்யராஜ், அருண் விஜய் ஆகியோர் பாங்காக் செல்லும் போட்டோ வெளியாகி உள்ளது. இதையடுத்து நாளை தனுஷ், ஷாலினி பாண்டே மற்றும் குழுவினர் செல்ல உள்ளனர். வசன காட்சிகளுடன் பாடல் காட்சி ஒன்றும் அங்கு படமாக உள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி அன்று ரிலீஸாக உள்ளது.