மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்க விரும்பி இயக்குனரை நச்சரிக்கும் பஹத் பாசில் | கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான் | என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் | 'ஸ்கூல் கட்' அடித்து 'பாட்ஷா' பார்த்த பஹத் பாசில் | 'தலைவன் தலைவி' தெலுங்கு ரிலீஸ் : ஆகஸ்ட் 1க்கு தள்ளி வைப்பு | 250 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | வார் 2 டிரைலர் : 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வைகள் | 'ரட்சகன்' பார்த்து நாகார்ஜுனா ரசிகரான லோகேஷ் கனகராஜ் | ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை |
மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் நடிப்பில் சமீபத்தில் 'டெஸ்ட்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. தயாரிப்பாளர் சசிகாந்த் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ளார். சில காரணங்களால் திரையரங்குகளில் வெளியாகாமல் இந்த படம் ஓடிடியில் வெளியானாலும் கூட இதற்கான புரமோஷனில் எந்த குறையும் வைக்காமல் இதில் நடித்த நட்சத்திரங்கள் அனைவருமே தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர். புரமோஷன் என்றாலே தள்ளிப்போகும் நயன்தாரா கூட இந்த படத்திற்காக தொடர்ந்து புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
அப்படி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடித்திருக்கும் மீரா ஜாஸ்மின் பற்றி தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மீரா ஜாஸ்மினும் நயன்தாராவும் ஒரே ஊரை (கேரளாவில் உள்ள திருவல்லா) சேர்ந்தவர்கள் தான். ஒரே கல்லூரியில் வெவ்வேறு காலகட்டங்களில் படித்தவர்கள். குறிப்பாக மீரா ஜாஸ்மின் உறவுப்பெண் ஒருவர் நயன்தாராவுடன் ஒரே வகுப்பில் இணைந்து ஒன்றாக படித்தவர்.
மீரா ஜாஸ்மின் பற்றி நயன்தாரா கூறும்போது, “நான் கல்லூரியில் படிக்கும் நாட்களில் மீரா ஜாஸ்மின் பற்றி தான் எங்கும் பேச்சாக இருக்கும். அவரது உறவுக்கார பெண் ஒருவர் என்னுடைய வகுப்பில் தான் படித்தார். என்னுடன் கூடவே அமர்ந்து கொண்டு இருப்பார். எப்போது பார்த்தாலும் மீராஜாஸ்மின் ஸ்விட்சர்லாந்தில் இருக்கிறார்.. பாடல் காட்சிகள் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று தினசரி அவரைப் பற்றிய ஏதாவது ஒரு செய்தியை பெருமையாக பேசிக் கொண்டிருப்பார். எனக்கும் அதை எல்லாம் கேட்கும் போது பிரமிப்பாகவே இருக்கும்.
நான் 2002ல் சினிமாவில் அடி எடுத்து வைத்த காலகட்டத்தில் மீரா ஜாஸ்மின் ரொம்பவே பிரபலமாகிவிட்டார். அவர் பெயர் தினசரி என் காதுகளில் விழாத நாட்களே இல்லை. அந்த வகையில் எனக்குள் ஒரு தூண்டுதலை ஏற்படுத்த மீரா ஜாஸ்மின் ஒரு காரணமாகவே இருந்தார்” என்று கூறியுள்ளார் நயன்தாரா.