கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 10 வருடங்களில் சினிமாவில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதுடன் பக்கத்து மாநிலமான கேரளாவில் விஜய், அஜித், சூர்யாவுக்கு அடுத்தபடியாக மிகவும் வரவேற்பை பெற்ற நடிகராகவும் மாறிவிட்டார். அதனால் தனது படங்களின் கேரள புரமோசன்களில் கூட மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். இதில் ஒரு படி மேலே போய் அவருக்கு புதிய ஒரு கவுரவமாக கேரள முதல்வரின் சொந்த ஊரான கண்ணூர் மாவட்டம் பினராயி கிராமத்தில் நடைபெற்ற பினராயி பெருமா என்கிற கலை மற்றும் கலாசார விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார் சிவகார்த்திகேயன்.
இந்த நிகழ்வில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் அருகில் அமர்ந்து இந்த நிகழ்ச்சியை கண்டு களித்தார் சிவகார்த்திகேயன். மேலும் இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, ''இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக முதல் நாள் எனக்கு கேரள முதல்வரின் வீட்டில் விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது, நான் கூட அங்கே போனதும் ஏதோ நம்மை ஒரு தனி அறையில் அமர வைத்து விருந்து பரிமாறுவார்கள் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அங்கே முதல்வர் உள்ளிட்ட மொத்த குடும்பமும் எனக்காக காத்திருந்து வரவேற்று என்னுடன் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்திய அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது'' என்று பேசினார்.
அது மட்டுமல்ல இந்த விழாவில் கலந்து கொண்டு ஊர் திரும்பிய சிவகார்த்திகேயன், “பினராயி பெருமா கலை மற்றும் கலாசார விழாவில் கேரள முதல்வரின் அழைப்பின் பெயரில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டதும் கேரள மக்களின் அன்பும் அரவணைப்பும் என்னை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்தது. இந்த மறக்க முடியாத நினைவுகளுக்கு நன்றி” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.