பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ஆமீர்கான். ஏற்கெனவே இரண்டு முறை திருமணமாகி அவர்களை விட்டுப் பிரிந்துள்ளார். ஆமீர்கான் தனது மகளுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டார். இந்நிலையில் மூன்றாவதாக பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஆமிர்கான் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியானது.
இதனிடையே, இரண்டாவது மக்காவ் சர்வதேச காமெடி விழாவில் தனது புதிய காதலியான கவுரி ஸ்ப்ராட் உடன் கலந்துகொண்டுள்ளார் ஆமீர்கான். அவர்கள் இருவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது புகைப்படக் கலைஞர்களுக்கும் அவர்கள் மகிழ்ச்சியுடன் 'போஸ்' கொடுத்துள்ளனர்.
புதிய காதலியான கவுரியுடன் ஆமீர் கலந்து கொண்ட முதல் வெளிநாட்டு பொது நிகழ்ச்சி இது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் தெரிகிறது.