படத்தை விமர்சிக்கும் முன் தங்கள் வீட்டு பெண்களிடம் ஒரு கேள்வியை கேளுங்கள் : ஜேஎஸ்கே இயக்குனர் ஆதங்கம் | மோகன்லாலின் நகை விளம்பரத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய கேரள போலீஸ் | நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்வேதா மேனன் | மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்க விரும்பி இயக்குனரை நச்சரிக்கும் பஹத் பாசில் | கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான் | என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் | 'ஸ்கூல் கட்' அடித்து 'பாட்ஷா' பார்த்த பஹத் பாசில் | 'தலைவன் தலைவி' தெலுங்கு ரிலீஸ் : ஆகஸ்ட் 1க்கு தள்ளி வைப்பு | 250 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | வார் 2 டிரைலர் : 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வைகள் |
இந்தியாவின் 'முதல் மகாத்மா' என்று அழைக்கப்படும், ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் வாழ்க்கை வரலாறு 'பூலே' என்ற திரைப்படமாக தயாராகி உள்ளது. இந்த படம் கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருந்தது. இப்படத்தை இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இயக்கியிருந்தார்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிராமண சமூகத்தினர் இத்திரைப்படத்தில் அவர்களை தவறாக சித்தரித்திருப்பதாக கூறி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்தப் படத்திற்கு தணிக்கை வாரியம் ‛யூ' சான்றிதழ் வழங்கியிருந்தது. பிறகு படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று தணிக்கை குழு, படக்குழுவினருக்கு உத்தரவிட்டிருந்தது. அதோடு சாதி குறித்தான உரையாடலைக் கொண்ட வாய்ஸ் ஓவரையும், சாதிய அமைப்பை விளக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் தணிக்கை வாரியம் கூறியிருக்கிறது. படத்தில் சில வசனங்களையும் மாற்றச் சொல்லியிருக்கிறார்கள்.
இதனால் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை, இது குறித்து படத்தில் இயக்குனர் ஆனந்த் மகாதேவன் கூறும்போது, ''படத்தின் டிரைலர் பற்றி சில தவறான புரிதல்கள் இருக்கிறது. படத்தைப் பார்ப்பதில் எந்த தொந்தரவும் இருக்காது, என்றாலும் சில சந்தேகங்களை அகற்ற வேண்டியது இருக்கிறது." என்கிறார்.