விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த 'ஜெயிலர்' படத்தில் காவாலா என்ற பாடலுக்கு நடனமாடிய தமன்னா, அதையடுத்து 'ஸ்ட்ரீ -2' என்ற ஹிந்தி படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். அந்த பாடலும் காவாலா பாடலைப் போன்று மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதையடுத்து தற்போது 'ரெய்டு- 2' என்ற ஹிந்தி படத்திலும் ஒரு பாடலுக்கு கிளாமர் நடனமாடியுள்ளார் தமன்னா.
'நாஷா' என்று தொடங்கும் அந்த பாடல் இன்று வெளியானது. இந்த பாடலில் ஜாக்குலின் பெர்னாண்டசும் தமன்னாவுடன் இணைந்து நடனமாடி இருக்கிறார். மேலும், அஜய் தேவ்கன் ரித்தேஷ் தேஷ்முக், வாணி கபூர், சுப்ரியா பதக் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் மே ஒன்றாம் தேதி திரைக்கு வருகிறது.