ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
பாலிவுட் நடிகையாக இருந்தாலும் ஒரு பாடலுக்கு நடனமாடுவதில் பிரபலமாகி இருப்பவர் ஊர்வசி ரத்தேலா. தமிழில் 'த லெஜண்ட்' படத்திலும் நடித்துள்ளார். கடந்த வாரம் வெளியான 'ஜாட்' ஹிந்திப் படத்தில் 'சாரி போல்' என்ற பாடலுக்கு நடனமாடி உள்ளார். இப்பாடல் யூடியூபில் 25 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
கடந்த வாரம் தமன்னா சிறப்பு நடனமாடியுள்ள 'ரெய்டு 2' படத்தில் இடம் பெற்ற 'நாஷா' பாடல் யூடியூப் தளத்தில் வெளியானது. படம் இன்னும் வெளிவராத நிலையில் பாடல் மட்டும் வெளியிடப்பட்டது. தற்போது வரை 21 மில்லியன் பார்வைகளை அப்பாடல் பெற்றுள்ளது.
இதனிடையே, ரசிகர் ஒருவர், “நாஷா' பாடலை விட இந்தப் பாடல் ரொம்பவே நன்றாக உள்ளது” என்று கமெண்ட் செய்துள்ளார். அந்த கமெண்ட் அடங்கிய ஒரு ஸ்க்ரீன்ஷாட்டை ஊர்வசி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு, உடனே டெலிட் செய்துள்ளார். அதை யாரோ ஸ்க்ரீன்ஷாட் எடுத்து பரப்பி விட்டுள்ளார்கள்.
மற்றவர்களை சீண்டிப் பார்ப்பதையே வேலையாக வைத்திருக்கிறார் ஊர்வசி என ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதற்கு முன்பு இயக்குனர் ஷங்கர், கியாரா அத்வானி ஆகியோரைப் பற்றியும் அவர் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.