அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
மலையாளத்தில் கடந்த 2003ல் மம்முட்டி நடிப்பில் வெளியான படம் பட்டாளம். பிரபல இயக்குனர் லால் ஜோஸ் இயக்கியிருந்தார். கதாநாயகியாக இந்த படத்தின் மூலம் டெஸ்ஸா ஜோசப் என்பவர் அறிமுகம் ஆனார். மலையாள கிராமம் ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கேள்விப்பட்டு அந்த கிராமத்திற்கு பாதுகாப்பாக ராணுவம் அனுப்பி வைக்கப்படுகிறது. அப்படி வரும் ராணுவ அதிகாரியான மம்முட்டிக்கும் அங்கு உள்ள இளம் விதவையான டெஸ்ஸா ஜோசப்புக்கும் காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் தனது கணவர் மரணத்திற்கு மம்முட்டி தான் காரணம் என தெரியவர இறுதியில் என்ன நடக்கிறது என கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் டெஸ்ஸா ஜோசப். ஆனால் ஆச்சரியமாக இந்த ஒரே ஒரு படத்துடன் அவர் சினிமாவை விட்டு ஒதுங்கினார். அதன் பிறகு 2015ல் மீண்டும் சினிமாவில் நுழைந்தவர் ஒரு சில படங்களில் நடித்தார். அதுவும் கை கொடுக்காத நிலையில் கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற தலைவன் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் ரீ என்ட்ரி என்று கொடுத்தார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் டெஸ்ஸா ஜோசப் கூறும்போது, “நான் சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் சினிமா குறித்த பல தவறான தகவல்கள் வெளிப்படையாக பேசப்பட்டு வந்தன. நான் படத்தில் நடித்த காலகட்டத்திலேயே சில விஷயங்களை கேட்டதாலும் சில விஷயங்களை கண்கூடாக பார்த்ததாலும் என்னுடைய தாயார் டென்ஷன் ஆனார். என்னுடைய முதல் படம் வெற்றி படமாக அமைந்தாலும் கூட அதன் பிறகு சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று கூறி அந்த படம் வெளியான பிறகு வந்த முதல் கல்யாண சம்பந்தத்தையே எனக்கு பேசி முடித்து விட்டார்.
அதன்பிறகு திருமண வாழ்க்கை, குழந்தைகள் பராமரிப்பு என்று போய்விட்டது. ஆனால் மீண்டும் சினிமாவில் நடிக்கலாமே என்கிற எண்ணம் வந்தபோது அதற்கான வாய்ப்புகள் அவ்வளவு எளிதாக கைகூடி வரவில்லை. சினிமா நிறைய மாறி இருந்தது. கடந்த வருடம் வெளியான தலைவன் படம் என்னை மீண்டும் மலையாளத்திற்கு அழைத்து வந்தாலும் பட்டாளம் படத்தில் நான் நடித்த விமலா என்கிற கதாபாத்திரமாக தான் இப்போதும் மலையாள ரசிகர்கள் என்னை பார்க்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.