அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

லவ் டுடே, டிராகன் படங்களை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அவருக்கு ஜோடியாக கிர்த்தி ஷெட்டி நடிக்கும் இதில் எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு, மிஷ்கின், ஆனந்தராஜ், சுனில் ரெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படம் குறித்த ஒரு தகவலை இணைய பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் விக்னேஷ் சிவன். அதில், படத்தின் முக்கியமான காட்சிகள் தற்போது மலேசியாவில் நடைபெற்று வருவதாகவும், கடைசி இரண்டு நாள் படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக தெரிவித்திருக்கின்றார். அதோடு, மலேசியாவில் உள்ள இரட்டை கோபுரத்தின் புகைப்படத்தை வெளியிட்டு, கடைசி இரண்டு நாள் படப்பிடிப்பு. இந்த ஊரை ரொம்பவே மிஸ் பண்ண போறோம் என்றும் ஒரு பதிவு போட்டுள்ளார். இதைவைத்து பார்க்கும்போது, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் படப்பிடிப்பு இதோடு முடிவடைகிறது என்பது தெரிய வந்துள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.