'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் |
நடிகர் ராம்சரண் ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் தற்போது பெத்தி என்கிற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு மட்டுமல்லாது குடும்ப சுற்றுப்பயணமாகவும் அடிக்கடி வெளிநாடுகள் சென்று வருவதை ராம்சரண் வாடிக்கையாகவே வைத்திருந்தார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது மனைவி உபாசனா அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் உபாசனா கூறும்போது, “எந்த வெளிநாட்டிற்கு சென்றாலும் மறக்காமல் குக்கர் ஒன்றை கையோடு கூடவே எடுத்து வந்து விட வேண்டும் என்பது ராம்சரணின் உத்தரவு. காரணம் வெளிநாட்டுக்கு சென்றாலும் தினசரி சாப்பாட்டில் அவருக்கு ஒரு இந்திய உணவாவது கட்டாயம் இருக்க வேண்டும். அதனாலேயே பெரும்பாலும் ராம்சரணின் தாயார் சில இந்திய உணவு வகைகளை ரெடிமேடாக எங்களுக்கு தயாரித்து கொடுத்து அனுப்பி விடுவார். நாங்கள் வெளிநாட்டில் ஹோட்டல்களில் இருந்து உணவை வரவழைத்து சாப்பிட்டாலும் கூட தங்கி இருக்கும் இடத்தில் அவருக்கு பிடித்த ஒரு நம்ம ஊரு ஸ்பெஷல் ஒன்றையும் சமைத்து விடுவோம். அதற்காகவே வீட்டிலிருந்து கையோடு குக்கர் ஒன்றையும் எடுத்துச் சென்று விடுகிறோம்” என கூறியுள்ளார்.