ஜாய் கிரிசில்டா உடன் திருமணம், குழந்தை : ஒப்புக் கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ் | 2025... 10 மாதங்கள், 222 படங்கள் : வெற்றிப் படங்கள் 12 மட்டுமே… | சாமியாரான பாலிவுட் நடிகை | இணை நாயகனான யோகி பாபு | தமிழில் வெளியாகும் 'சத்தா பச்சா' | கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 9 விருதுகளை அள்ளிய 'மஞ்சும்மல் பாய்ஸ்' | தெலுங்கில் படம் தயாரிக்கும் சமந்தா : தமிழை புறக்கணிப்பது ஏன் | பிளாஷ்பேக்: பெயரை மாற்றிக் கொண்டு தமிழுக்கு வந்த கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: திரைப்படமான சாண்டில்யன் கதை | மீண்டும் அதே வன்முறை, ரத்தம் : லோகோஷ் கனகராஜ், அருண்மாதேஸ்வரன் மாறவே மாட்டார்களா? |

2025ம் ஆண்டில் இதுவரையில் 70 படங்கள் வரை வெளிவந்துள்ளன. அவற்றில், நான்கைந்து படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. 
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு படமும் அதிகமான தியேட்டர்களில் வெளியாவதால் அவை அதிகபட்சமாக இரண்டு வாரங்கள் வரையில் மட்டுமே ஓடுகின்றன. ஒரு சில படங்கள் மட்டுமே விதிவிலக்காக 25 நாட்கள், 50 நாட்கள் என ஓடுகின்றன.
இந்த வருடத்தில் இரண்டாவது 50வது நாள் படமாக 'டிராகன்' படம் ஓடியுள்ளது. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர் மற்றும் பலர் நடித்த இந்தப் படம் பிப்ரவரி 21ம் தேதி வெளிவந்தது. படம் 50 நாள் ஓடியது குறித்து படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் போஸ்டரைப் பகிர்ந்துள்ளார்கள்.
இதற்கு முன்பு மணிகண்டன் நடித்த 'குடும்பஸ்தன்' படம் 50 நாட்கள் வரை ஓடியது.