புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் | சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த் | ‛குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை | ரஜினி, கமல் பட இயக்குனர் யார்? இன்னும் தீராத சந்தேகம் | 'மஞ்சும்மல் பாய்ஸ்'ல் கண்மணி அன்போடு.. 'லோகா'வில் கிளியே கிளியே..: இளையராஜா ராக்கிங் | 'பாகுபலி' தயாரிப்பாளர்களை கடுமையாகப் பேசிய போனி கபூர் | பிளாஷ்பேக்: அஜித்தின் கலையுலக மற்றும் தனி வாழ்வில் அமர்க்களப்படுத்திய “அமர்க்களம்” | நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2' | செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு |
2000ம் ஆண்டு ஆரம்பமான கால கட்டங்களில் தமிழ் சினிமாவில் வளரும் கதாநாயகர்களாக இருந்தவர்கள் விஜய், அஜித். அவர்களுடன் அப்போது சில படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் த்ரிஷா, சிம்ரன். அப்போதெல்லாம் அவர்கள் ஜோடியாக ஆடும் பாடல்களுக்கு அப்படி ஒரு வரவேற்பு இருக்கும்.
அந்த கால கட்டங்களில் தனியார் சாட்டிலைட் சேனல்களில் அந்தப் பாடல்களை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. தொலைபேசியில் விருப்பப் பாடல்களைக் கேட்கும் ரசிகர்கள் அந்தப் பாடல்களைத்தான் அதிகம் விரும்பிக் கேட்பார்கள்.
அப்படியான பாடல்கள் ஒன்றா, இரண்டா நிறைய உண்டு. இப்போதும் அந்த இளமையான விஜய், அஜித், சிம்ரன், த்ரிஷா ஆகியோரைப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த ரசிகர்களுக்கு 'குட் பேட் அக்லி' படம் பார்த்த பின் ஒரு வருத்தம் ஏற்பட்டுள்ளது.
படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடித்திருந்தாலும், முன்னாள் தோழியாக சிறப்புத் தோற்றத்தில் சிம்ரன் நடித்திருந்தாலும், அஜித்துடன் ஒரு பாடலுக்காவது நடனமாட வைத்திருக்கலாம் என்பது அவர்களுக்குக் குறையாக உள்ளது.
படத்தில் எத்தனையோ பழைய சூப்பர் ஹிட் பாடல்களைப் பயன்படுத்தியவர்கள், அஜித் - த்ரிஷா, அஜித் - சிம்ரன் ஆகியோரது பாடல்களை மீண்டும் பயன்படுத்தி ஒரு 'ரெட் ட்ராகன்' அஜித்துடன் ஒரு 'ரெட்ரோ' பீலிங்கை வரவழைத்திருக்கலாம்.