குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் | டாக்குமெண்டரியாக தயாராகும் ரகுவரன் வாழ்க்கை | தமிழுக்கு வரும் 'கொண்டல்' பிரதிபா | 'அன்னை இல்லத்தில் உரிமை இல்லை' : பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு கோர்ட் உத்தரவு |
தெலுங்கில் ரவிதேஜா நடித்த ‛பலுபு, கிராக்' மற்றும் பாலகிருஷ்ணா நடித்த ‛வீர சிம்ஹா ரெட்டி' உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் பிரபல இயக்குனரான கோபிசந்த் மாலினேனி. வீர சிம்ஹா ரெட்டி படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, தற்போது பாலிவுட்டில் முதன்முறையாக அடியெடுத்து வைத்துள்ள கோபிசந்த், நடிகர் சன்னி தியோலை வைத்து ‛ஜாட்' என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். ரெஜினா கசான்ட்ரா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், ஜெகபதிபாபு உள்ளிட்ட தெலுங்கு நட்சத்திரங்கள் சிலரும் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த நிலையில் இயக்குனர் கோபிசந்த், மாலினேனி இந்தப் படத்தில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது தங்களது செட்டிற்கு நடிகர் பிரபாஸ் வருகை தந்த புகைப்படங்கள் சிலவற்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு உள்ளார். தங்களது படப்பிடிப்பு தளத்திற்கு பிரபாஸ் நேரில் வந்து ஜாட் படம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்ததாக கூறியுள்ளார். கடந்த 2023ல் பாலிவுட்டில் வெளியான மிகப்பெரிய வெற்றியும் வசூலையும் பெற்ற ‛கடார் 2' படத்தின் மூலம் மீண்டும் பார்முக்கு திரும்பிய சன்னி தியோலின் அடுத்த படமாக இது வெளியாக இருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தி உள்ளது.