ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடித்த ‛எம்புரான்' திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்த படத்தில் இடம்பெற்ற மதம் சம்பந்தப்பட்ட சில காட்சிகளுக்காக கடந்த சில நாட்களாகவே இந்த படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. மீண்டும் சில காட்சிகள் நீக்கப்பட்டு இந்த படம் தற்போது வெளியாகி உள்ளது. இன்னொரு பக்கம் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் இந்த படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமை பெற்ற ஸ்ரீ கோகுலம் பிலிம்ஸ் மற்றும் இயக்குனர் பிரித்விராஜ் ஆகியோருக்கு சமீபத்தில் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆண்டனி பெரும்பாவூர் அலுவலகத்தில் ரெய்டு நடந்தது.
இதனைத் தொடர்ந்து எம்புரான் படம் இந்துமத உணர்வாளர்களை பாதித்துள்ளது என்பதாலும் அதன் காரணமாக மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தால் தான் இப்படி வருமானவரித்துறை திடீரென நோட்டீஸ் அனுப்பி உள்ளது, ரெய்டு நடத்துகிறது என்றும் செய்திகள் கிளம்ப ஆரம்பித்தன. ஆனால் பிரித்விராஜூக்கு நோட்டீஸ் அனுப்பியது உண்மைதான் என்றாலும் இப்படி கிளம்பிய அந்த செய்திகளில் கொஞ்சம் கூட உண்மை இல்லை என்று தெரிய வந்துள்ளது.
எம்புரான் படம் மார்ச் 27ல் வெளியானது. பிரித்விராஜூக்கு கடந்த மார்ச் 29ம் தேதி வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பினர். அப்போது எம்புரான் சர்ச்சை பெரிய அளவில் உருவாகி இருக்கவில்லை. இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது வழக்கமான ஒரு நடைமுறைதான். அதாவது கடந்த 2022ல் நடிகர் பிரித்விராஜ் நடித்த கடுவா, ஜன கன மன மற்றும் கோல்ட் ஆகிய படங்களுக்கு அவர் வழக்கத்தை விட குறைவான தொகையை சம்பளமாக பெற்றிருந்தார். காரணம் அந்த மூன்று படங்களிலும் அவர் இணை தயாரிப்பாளராக தன்னை இணைத்துக் கொண்டிருந்ததால் படத்தின் லாபத்தில் பங்குபெறும் விதமாகத்தான் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டிருந்தார்.
அப்படியானால் நடிகருக்கான சம்பளத்தை விட இணை தயாரிப்பாளருக்கான ஊதியம் அதிகமாக இருக்கும் என்கிற கண்ணோட்டத்தில் தான். அது குறித்த விவரங்களை சமர்ப்பிக்கும் படி வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பே பிரித்விராஜுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தாலும் அவர் பிசியாக இருந்ததாலோ என்னவோ விளக்கம் அளிக்கவில்லை. இப்போது மார்ச் 31ல் வருமான வரி கணக்கு முடிக்கும் நாள் என்பதால் அதற்கு முன்னதாக இது குறித்து பிரித்விராஜிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.