ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் மோஹித் சூரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'சையாரா'. பாலிவுட் நடிகர் அஹான் பாண்டே நடித்துள்ளார், மேலும் அனீத் பட்டா கதாநாயகியாக நடிக்கிறார். வருகின்ற ஜூலை 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தற்போது இப்படத்திலிருந்து 'சையாரா' என்ற தலைப்புப் பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் பாடல்களை 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்துள்ளதாக இயக்குனர் மோஹித் சூரி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: இந்த இசை ஆல்பத்தில் உள்ள பாடல்கள் 'எண்ணங்கள் மற்றும் மெல்லிசைகள்' 5 ஆண்டுகளுக்கும் மேலாக கவனமாக சேகரித்து தொகுக்கப்பட்டவை. என்னைப் பற்றி ஒரு சில நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால், புதிய இசையமைப்பாளர்கள், பாடகர்களைச் சந்திப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் புத்தகங்களை படிக்கவும், புத்தகங்களை சேகரிக்கவும் விரும்புபவர்களைப் போலவே மெல்லிசைகளையும் பாடல்களையும் சேகரிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.
எனவே, சையாராவின் ஆல்பத்தில் எனது பாடல்கள், எண்ணங்கள் மற்றும் மெல்லிசைகள் உள்ளது. அவற்றை நான் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கவனமாக சேகரித்து தொகுத்து வருகிறேன். சையாராவிற்காக அழகான, ஆத்மார்த்தமான மெல்லிசைகளுடன் கூடிய மிகவும் புதிய ஆல்பத்தை பார்வையாளர்களுக்கு வழங்க விரும்புகிறேன்.
அறிமுக நடிகர்களின் படத்திற்காக நான் புதிய காதல் ஆல்பத்தை தர விரும்புகிறேன். சையாராவின் இசை ஆல்பம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. எனவே, இந்த ஆல்பத்தின் ஒவ்வொரு பாடலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உணர்கிறது. சையாராவின் தலைப்புப் பாடலை முதலில் வெளியிட்டு எங்கள் மார்க்கெட்டிங் விளம்பரத்தை தொடங்குகிறோம்.
சையாராவின் தலைப்புப் பாடல் மூலம் காஷ்மீரில் இருந்து பாலிவுட் வரை மிகவும் திறமையான இந்திய இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களான பஹீம் அப்துல்லா மற்றும் அர்சலான் நிஜாமி ஆகியோரை அறிமுகப்படுத்துகிறோம். இந்த பாடலை தனிஷ்க் பாக்சி இசையமைத்துள்ளார். அழகான பாடல் வரிகளை மேஸ்ட்ரோ இர்ஷாத் கமில் எழுதியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.