ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் தர்மா புரடக்ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் மூலமாக படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஹோம் பவுண்டு என்கிற படத்தை தயாரித்தார் கரண் ஜோகர். இந்த படம் சில தினங்களுக்கு முன்பு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு முதன்முறையாக வெளியானது. இந்த நிலையில் அந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரதிக் ஷா என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தன. தற்போது அது குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக தர்மாக புரொடக்ஷன் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கூறப்பட்டுள்ளதாவது ; “தர்மா புரடக்ஷன்ஸ் எப்போதுமே தவறான நடவடிக்கைகளுக்கும், அத்துமீறல்களுக்கும், குறிப்பாக பாலியல் துன்புறுத்தல்களுக்கும் எதிரான நிறுவனம். அதிலும் பாலியல் துன்புறுத்தல் பிரச்னைகளை நாங்கள் ரொம்பவே சீரியஸாக கருதுகிறோம். இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரதிக்ஷா என்பவர் எங்களது படத்தில் ப்ரீ லான்சராகத்தான், அதுவும் கொஞ்ச காலத்திற்கே பணியாற்றினார். அந்த சமயத்தில் அவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் படக்குழுவினர் சார்பில் இருந்து வரவில்லை” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.