மொழி சர்ச்சை... கர்நாடகாவில் வலுக்கும் எதிர்ப்பு : மன்னிப்பு கேட்க முடியாது என கமல் திட்டவட்டம் | 7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீஸ் | விஜய் தேவரகொண்டா படத்தால் சூர்யா படத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ் | கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? | இட்லி கடை ரிலீஸ் தேதியில் சூர்யா 45 | தியேட்டரில் வெளியாகும் 'பறந்து போ' | என்னை பற்றிய பதிவுகளை நீக்க வேண்டும்: ஆர்த்திக்கு, ரவி மோகன் நோட்டீஸ் | மீண்டும் இணையும் வடிவேலு - பார்த்திபன் | பிளாஷ்பேக்: பூமியில் வாழ்ந்த கடவுள் 'என்.டி.ஆர்' |
தெலுங்கு திரையுலகில் பிரபல சீனியர் நடிகரான மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு, தற்போது கண்ணப்பா என்கிற புராண படத்தை தயாரித்து அதில் கதாநாயகனாக நடித்து வருகிறார். முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். படம் ஜூன் 27ம் தேதி வெளியாக இருக்கிறது. பான் இந்திய படமாக இது உருவாகியுள்ளது. அதற்கேற்றபடி மலையாளத்தில் இருந்து மோகன்லால், பாலிவுட்டில் இருந்து அக்ஷய் குமார் மற்றும் தெலுங்கில் இருந்து நடிகர் பிரபாஸ் ஆகியோர் மூன்று முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களது கதாபாத்திரம் கேமியோ என்று சொல்லும் அளவிற்கு சில நிமிடங்களே வந்து போகும் விதமாகத்தான் உருவாக்கப்பட்டிருந்தது என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் நடிகர் விஷ்ணு மஞ்சு இந்த மூவரும் படத்தில் எவ்வளவு நேரம் இடம் பெறுகிறார்கள் என்கிற விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த வகையில் இந்த படத்தில் ருத்ரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பிரபாஸ் 15லிருந்து 20 நிமிடங்கள் வரை திரையில் தோன்றுகிறாராம். குறிப்பாக கடைசி ஐம்பது நிமிட காட்சிகளில் இவரது கதாபாத்திரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமாம். அதேபோல கிராதா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள மோகன்லால் படத்தில் 15 நிமிட காட்சிகளில் வருகிறார் என்றும், சிவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்ஷய் குமார் பத்து நிமிடங்கள் வந்து போகிறார் என்றும் கூறியுள்ளார் நடிகர் விஷ்ணு மஞ்சு.