அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா |
நடிகர் பிரபாஸ் நடிப்பில் அவரது ரசிகர்களுக்கு ஒரு திடீர் விருந்தாக சமீபத்தில் வெளியான கண்ணப்பா திரைப்படம் அமைந்தது. இருந்தாலும் அவர்களுக்கு முழு விருந்து அளிக்கும் விதமாக தற்போது அவர் இயக்குனர் மாருதி இயக்கத்தில் நடித்து வரும் ராஜா சாப் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற பாகுபலி பத்தாம் வருட ரீ-யூனியன் கொண்டாட்டத்திலும் நடிகர் பிரபாஸ் கலந்து கொண்டார். அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகின. அதேசமயம் அன்று காலையிலேயே அவர் ராஜா சாப் படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீநிவாஸ் குமாருடன் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் சோசியல் மீடியாவில் வெளியானது.
இந்த இரண்டு புகைப்படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்த பல ரசிகர்களும் அவரது ஹேர்ஸ்டைலில் ஏதோ வித்தியாசம் தெரிவதாக சந்தேகத்தை கிளப்பியுள்ளனர். பலரும் பாகுபலி கொண்டாட்டத்தின் போது அவர் இருப்பது ஒரிஜினல் ஹேர் ஸ்டைலில் என்றும், ராஜா சாப் படத்தில் அவர் விக் வைத்து தான் நடித்துள்ளார் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.