300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
ஏ.ஆர்.ராகவேந்திரா இயக்கத்தில் நாகராஜன் கண்ணன், காயத்ரி, ஐஸ்வர்யா உள்ளிட்டோர் நடித்து, வெளியாகி உள்ள படம் 'மாயக்கூத்து'. ஒரு எழுத்தாளர் தொடர்கதை எழுதுகிறார். அந்த கதையில் வரும் கேரக்டர்கள் திடீரென உயிர் பெற்று, அந்த எழுத்தாளர் வீடு தேடி வருகின்றன. அதன்பின் என்ன நடக்கிறது என்பது மாயக்கூத்து படத்தின் கதை.
திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தின் பட்ஜெட் ரூ.25 லட்சம் ரூபாய்தான் எனக் கூறி, சினிமா ஆட்களை மட்டுமல்லா, ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைக்கின்றனர் படக்குழுவினர். இவ்வளவு குறைந்த பட்ஜெட்டில் எப்படி படம் எடுத்தனர் என படக்குழுவினர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்த உலகத்தில் ஏன் நமக்கு எல்லாம் கெடுதல் நடக்கிறது? அதற்கு காரணம் என்ன? கடவுள் ஏன் நம்மை தண்டிக்கிறார்? இப்படியான கேள்விகள் தான் தன்னை இப்படி ஒரு கதையை யோசிக்க வைத்ததாக சொல்கிறார் படத்தின் இயக்குனரான ஏ.ஆர்.ராகவேந்திரன். இயக்குனர் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து இப்படத்தை மிக குறைந்த செலவில் எடுக்க திட்டமிட்டனர். அதற்கு ஏற்றபடி பட்ஜெட் போட்டு, நடிகர், நடிகைகள், லோகேஷன்கள் என ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து தேர்வு செய்து படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். ஒருநாள் இரவு படப்பிடிப்புக்கு 1 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். இந்தப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் 23 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
என்னதான் படம் எடுத்து முடித்தாலும் அதனை வெளியிட மிகப்பெரிய போராட்டம் நடந்தது. 3 ஆண்டுகள் வரை நடந்த நீண்ட போராட்டத்திற்கு பிறகே திரையரங்கிற்கு படத்தை கொண்டு வந்துள்ளனர். தற்போது படம் பார்த்த பத்திரிக்கையாளர்கள், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் தரும் பாராட்டுகள் தங்கள் 3 ஆண்டு கஷ்டத்திற்கு பலன் அளித்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.