ஆக்ஷன் படத்தில் நடிக்க விரும்பும் சான்வே மேக்னா | திரையில் தோன்றும் ஏஆர் ரஹ்மான் சகோதரி | பிளாஷ்பேக் : உண்மையான ஆபரேஷன் காட்சி இடம் பெற்ற படம் | பிளாஷ்பேக் : முதல் சிங்களப் படத்தை தயாரித்த தமிழர் | மனோஜ் பாரதி உடலுக்கு நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி | அதிர்ந்து போனேன் : மனோஜ் மறைவுக்கு இளையராஜா இரங்கல் | இயக்குனர் பாரதிராஜா மகன், நடிகர் மனோஜ் பாரதி காலமானார் | பணம் தேவைப்படும் வரை நடிப்பேன் - பவன் கல்யாண் | ரன்பீர் கபூருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ் | பாஸ் என்ற பாஸ்கரன் இரண்டாக பாகம் எப்போது? : இயக்குனர் ராஜேஷ் தகவல் |
சென்னை : என் ஹார்ட் டிஸ்கை எடுத்து வைத்துக் கொண்டு தர மாட்டேனு சொல்கிறார்கள் எனக் கூறி சென்னையில், பெப்சி அலுவலகம் முன் நடிகை சோனா திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சோனா ஹெய்டன். கடந்த 20 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் ஏராளமான நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் ஜெய் நடித்த ‛கனிமொழி' என்ற படத்தை தயாரித்தார். அந்த படம் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதன்பின் ஓரிரு படங்களில் நடித்தவர், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வந்தார்.
இதனிடையே தனது வாழ்க்கை வரலாற்றை தழுவி 'ஸ்மோக்' என்ற வெப்சீரிஸை இயக்கினார். ஆனால் இந்த வெப் சீரிஸை தொடரக்கூடாது, அதை வெளியிடவும் கூடாது என்று பலர் தன்னை மிரட்டி வருவதாக சமீபத்தில் கூறினார்.
இந்நிலையில் பெப்சி அலுவலகம் முன்பு சோனா திடீரென தர்ணா போராட்டத்தில் இறங்கி உள்ளார். அவர் கூறுகையில், ‛‛நான் எடுத்த பயோபிக் படத்தின் ஹார்ட் டிஸ்க்கை எடுத்து வைத்துக் கொண்டு தர மறுக்கிறார்கள். எங்களிடம் மேலாளராக வேலை பார்த்த ஷங்கர் என்பவர் ரூ.8 லட்சம் வரை என்னிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். அதுபற்றியும் நடவடிக்கை எடுக்குமாறு பெப்சியிடம் முறையிட்டு இருந்தேன். இது நம்ம குடும்பமாச்சே நமக்கு உதவுவார்கள் என்று இருந்தேன். ஆனால் இதுவரை உதவவில்லை. எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். எனக்கு என் ஹார்ட் டிஸ்க், எனது பணம் வர வேண்டும். அதுவரை எத்தனை நாட்கள் ஆனாலும் தினமும் வந்து நான் போராடுவேன்''.
இவ்வாறு சோனா தெரிவித்துள்ளார்.