புஷ்பா 2 இயக்குனருக்கு இப்படி ஒரு மகளா? ஓடிடி-யில் கலக்கும் படமாக இருக்குமா | தனுஷின் இட்லி கடைக்கு புதிய சிக்கலா? | ஆக்ஷன் படத்தில் நடிக்க விரும்பும் சான்வே மேக்னா | திரையில் தோன்றும் ஏஆர் ரஹ்மான் சகோதரி | பிளாஷ்பேக் : உண்மையான ஆபரேஷன் காட்சி இடம் பெற்ற படம் | பிளாஷ்பேக் : முதல் சிங்களப் படத்தை தயாரித்த தமிழர் | மனோஜ் பாரதி உடலுக்கு நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி | அதிர்ந்து போனேன் : மனோஜ் மறைவுக்கு இளையராஜா இரங்கல் | இயக்குனர் பாரதிராஜா மகன், நடிகர் மனோஜ் பாரதி காலமானார் | பணம் தேவைப்படும் வரை நடிப்பேன் - பவன் கல்யாண் |
வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜனநாயகன்'. தீவிர அரசியலில் இறங்க உள்ளதால் இந்தப் படத்துடன் தன்னுடைய நடிப்பு வாழ்க்கையைத் தியாகம் செய்ய உள்ளார் விஜய். அதனால், இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
தேர்தலுக்கு முந்தைய படம் என்பதால் இப்படத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான கருத்துக்கள் நிறைய இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் தலைப்பே இது ஒரு அரசியல் படம் என்பதைப் புரிய வைக்கும். அதே சமயத்தில் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வெளிவந்த 'பகவந்த் கேசரி' படத்தின் தழுவல்தான் இந்தப் படம் என்ற தகவலும் உள்ளது. அப்படத்தின் ரீமேக் உரிமையையும் தயாரிப்பாளர் வாங்கிவிட்டார்.
இதனிடையே, இப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று வெளியாக உள்ளதாகத் தகவல் வந்துள்ளது. அது படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பாக இருக்கும் என்கிறார்கள்.
2026 மே மாதத்தில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால், படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதுதான் சரியாக இருக்கும் என நினைக்கிறார்களாம். முதலில் இந்தப் படத்தை தீபாவளிக்குத் திரையிட திட்டமிட்டதாகச் சொன்னார்கள்.
தேர்தலுக்கு முன்பு வெளிவர உள்ளதால் இந்தப் படத்திற்கு ஆளும் கட்சி தரப்பிலிருந்து அதிக நெருக்கடிகள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.