பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் |

விஜய்யுடன் நடித்த 'கோட்' படத்திற்கு பிறகு தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா. மேலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் தனது மகன் ரிஷி ராகவேந்தருடனான கான்சர்ட் ஒன்றில் நடனமாடிய வீடியோவை வெளியிட்டிருந்த பிரபுதேவா, விரைவில் தனது மகனை சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் செய்யப் போகிறார்.
இந்த நிலையில் நேற்று திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலுக்கு தனது மனைவி, குழந்தையுடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் பிரபுதேவா. அப்போது அங்கு கூடிய ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று உள்ளார் பிரபுதேவா. அது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




