என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

பிரபுதேவா நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளியான படங்கள் எதுவும் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லை. ஆனாலும் தற்போது தமிழில் அதிக படங்களை கைவசம் வைத்திருப்பவர் யார் என்றால் அது பிரபுதேவா தான். தற்போது சேதுராஜன் ஐபிஎஸ் என்ற வெப் என்கிற சீரிஸ் ஒன்றில் கதாநாயகனாக நடித்துள்ளார் பிரபுதேவா. கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியான பொன் மாணிக்கவேல் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த பிரபுதேவா, மீண்டும் இந்த வெப் சீரிஸில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்த வெப்சீரிஸை ரபீக் இஸ்மாயில் என்பவர் இயக்கியுள்ளார். இந்த கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து பிரபுதேவா கூறும்போது, “சேதுராஜன் ஐபிஎஸ் என்பது வெறும் ஒரு சாதாரண போலீஸ் அல்ல. முன்பு நான் நடித்த படங்களை விட இந்த கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே சவாலாக இருந்தது. இது இப்போது ஏதோ சீசனுக்காக எடுக்கப்பட்ட கதை அல்ல.. தற்போது அவசியமான ஒன்று தான்” என்று கூறியுள்ளார். சோனி லைவ் நிறுவனம் இந்த வெப் சீரிஸை தயாரிகிறது.