அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
நடன இயக்குனர் மற்றும் நடிகர் பிரபுதேவா தமிழில் இன்னும் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். தற்போது பிரபுதேவா முதல்முறையாக வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரை ரத்தச்சாட்சி பட இயக்குனர் ரபிக் இஸ்மாயில் இயக்கியுள்ளார். இந்த வெப் தொடருக்கு 'ரியாட்' என தலைப்பு வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளது.
இதில் லிங்கா, பவில் நவகீதன், அருவி மதன், ஜெமினி மணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் தொடரை ராஜ் கமல் நிறுவனத்தை சேர்ந்த மகேந்திரன் தயாரித்துள்ளார். இந்த வெப் தொடர் அடுத்த வருடம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.