பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன், சபீர் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் 'சார்பட்டா பரம்பரை'. வட சென்னை கதைக்களத்தில் குத்துச்சண்டையை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் கொரோனா காலகட்டத்தில் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை பா.ரஞ்சித்தும், ஆர்யாவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கப்பட்டது.
இந்த படத்தை 80 கோடி பட்ஜெட்டில் நீலம் புரொடக்சனுடன் சேர்ந்து மூன்று நிறுவனங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் அதில், ஜீ நிறுவனம் தற்போது விலகி விட்டதாம். அதன் காரணமாகவே புதிய தயாரிப்பு நிறுவனத்திற்காக காத்திருக்கிறாராம் பா.ரஞ்சித். இப்படி இந்த படம் ஆரம்பகட்ட பணிகளோடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதால் சார்பட்டா பரம்பரை-2 படம் கைவிடப்பட்டதாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது.