'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
தமிழில் பிரபு சாலமன் இயக்கிய ‛மைனா' படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் அமலாபால். ஒரு கட்டத்தில் விஜய், விக்ரம், சூர்யா படங்களில் நடித்த அமலாபால், 2014ல் இயக்குனர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்து கொண்டவர், 2017 விவாகரத்து பெற்று விட்டு, மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.
‛வேலையில்லா பட்டதாரி-2, திருட்டுப்பயலே-2, ராட்சசன்' படங்களில் நடித்தவர், ரத்னகுமார் இயக்கிய ‛ஆடை' என்ற படத்தில் ஆடையே அணியாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், 2023ல் ஜெகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அமலாபாலுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ‛இலை' என்று பெயர் வைத்திருப்பதாக அறிவித்த அமலாபால், தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், கணவர் தனக்கு வாங்கி கொடுத்த புதிய காரில் இருந்து இறங்கும் அமலாபால், தனது மகனை ஆசையோடு வாங்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அதோடு அவர் பதிவிட்டுள்ள கேப்ஷனில், ‛முதலில் பேபி அடுத்து பேப்' என்று பதிவிட்டுள்ளார்.