'ராபின்ஹூட்' படத்தில் ஆஸி., கிரிக்கெட் வீரர் வார்னரின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது | 'பெருசு' மாதிரியான படங்கள் தமிழ் சினிமாவுக்குத் தேவையா ? | நாக சைதன்யாவுடன் சேர்ந்து போட்ட 'டாட்டூ'வை அழித்துவிட்டாரா சமந்தா ? | குடித்துவிட்டு கார் ஓட்டிய இளைஞரால் பலியான பெண் ; ஜான்வி கபூர் கடும் கண்டனம் | முதல் நாள் தாக்கிவிட்டு மறுநாள் மன்னிப்பு கேட்டார் சல்மான்கான் ; நடிகர் அதி இராணி தகவல் | கடன் வாங்கி நடுத்தெருவுக்கு வந்தேன் - நீலிமா ராணி ஓப்பன் டாக் | இதயம் சீரியலிலிருந்து விலகிய கதாநாயகி | முன்னாள் மனைவிகள் இருவர் மீது போலீசில் புகார் அளித்த நடிகர் பாலா | 2028ல் 'புஷ்பா 3' வெளியாகும் : தயாரிப்பாளர் தகவல் | எஸ்ஜே சூர்யா பேச்சால் ரஜினி ரசிகர்கள் அதிருப்தி |
மலையாளத்தில் இந்த வருடம் பீல்குட் படங்கள் எண்ணிக்கை என்பது இதுவரை குறைவாகத்தான் வந்துள்ளது. ரேக சித்திரம், ஆபிசர் ஆன் டூட்டி என இன்வெஸ்டிகேஷன் படங்கள் தான் தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றியை பெற்று வருகின்றன. இந்த நிலையில் வரும் மார்ச் 27ம் தேதி மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் லூசிபர் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள எம்புரான் திரைப்படம் வெளியாக இருக்கிறது. சொல்லவே தேவையில்லை இது எப்படிப்பட்ட கமர்சியல் ஆக்ஷன் படம் என்று.
இதைத்தொடர்ந்து அடுத்ததாக ஏப்ரல் 10-ம் தேதி சித்திரை விசு கொண்டாட்டமாக மம்முட்டி நடித்துள்ள பஷூக்கா என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் டினோ டென்னிஸ் இயக்கியுள்ளார். இவர் மறைந்த பிரபல மலையாள கதாசிரியரும், இயக்குனருமான கலூர் டென்னிஸ் என்பவரின் மகன் தான். இந்த படமும் அதிரடி ஆக்ஷன் படமாகவே உருவாகியுள்ளது. இதில் கவுதம் மேனன் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். அந்த வகையில் இனி வரும் அடுத்தடுத்த நாட்களில் மலையாள திரையுலகம் ஆக்ஷன் மோடுக்கு மாற இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டது.