டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மறைந்த நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், ரவி உடியவார் இயக்கத்தில் 2017ல் வெளிவந்த ஹிந்திப் படம் 'மாம்'. 30 கோடி செலவில் தயாரான அந்தப் படம் 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி பெற்றது. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரும் படத்தை இணைந்து தயாரித்திருந்தார். ஸ்ரீதேவி நாயகியாக நடித்து வெளிவந்த கடைசி படம் அது. சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அவரது மறைவுக்குப் பிறகு பெற்றுத் தந்தது.
அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர் நடிக்கப் போவதாக போனி கபூர் அறிவித்துள்ளார். மும்பையில் நேற்று நடைபெற்ற 'இபா' சில்வர் ஜுப்ளி கொண்டாட்டத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் போனி கபூர்.
“குஷி நடித்த 'ஆர்ச்சிஸ், லவ்யப்பா, நடானியன்' ஆகிய படங்களை நான் பார்த்தேன். 'நோ என்ட்ரி' படத்திற்குப் பிறகு அவரை வைத்து படமெடுக்க உள்ளேன். அது 'மாம் 2' படமாக இருக்கும். அவரது அம்மாவின் வழியில் செல்ல குஷி முயற்சித்து வருகிறார். அவர் நடித்த அனைத்து மொழிகளிலுமே டாப் ஸ்டார் ஆக இருந்தார். ஜான்வியும், குஷியும் அது போலவே முழுமையாக வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கிறேன்,” என்று பேசியுள்ளார்.




