100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 : படத்தில் நடிப்பவர்கள் விபரம் | பாலிவுட்டை விட்டு விலக முடிவெடுத்த அனுராக் காஷ்யப் | என் பணியை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன் - கஜராஜ் ராவ் | விஷ்ணு விஷாலுக்கு வில்லன் ஆன செல்வராகவன்! | அடுத்த மாதம் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு துவங்குகிறது | ராம்சரண் படத்திற்கு தயாரான சிவராஜ் குமார்! | நாகார்ஜூனா உடன் நடனமாடும் பூஜா ஹெக்டே! | பிளாஷ்பேக் : மோகன் கையில் மைக்கை கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : மறக்கடிக்கப்பட்ட மகா கலைஞன் கொத்தமங்கலம் சீனு | கோவில்களில் சினிமா பாட்டு பாட நீதிமன்றம் தடை |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் 'கூலி' .இதில் நாகார்ஜூனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டமாக சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், மும்பை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. சமீபத்தில் இப்படத்தில் சிறப்பு பாடல் ஒன்றிற்கு பூஜா ஹெக்டே நடனமாடுகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்த பாடல் காட்சியை கடந்த சில நாட்களுக்கு முன்பு படமாக்கியுள்ளனர். இதில் நாகார்ஜூனா, பூஜா ஹெக்டே இருவரும் இணைந்து இந்த சிறப்பு பாடலுக்கு நடனமாடியுள்ளார். ஏற்கனவே பூஜா ஹெக்டே, நாகார்ஜூனாவின் மகன்கள் நாக சைதன்யா, அகில் அக்கினேனி இருவருக்கும் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது முதல்முறையாக நாகார்ஜூனா உடன் பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.