பாலிவுட்டை விட்டு விலக முடிவெடுத்த அனுராக் காஷ்யப் | என் பணியை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன் - கஜராஜ் ராவ் | விஷ்ணு விஷாலுக்கு வில்லன் ஆன செல்வராகவன்! | அடுத்த மாதம் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு துவங்குகிறது | ராம்சரண் படத்திற்கு தயாரான சிவராஜ் குமார்! | நாகார்ஜூனா உடன் நடனமாடும் பூஜா ஹெக்டே! | பிளாஷ்பேக் : மோகன் கையில் மைக்கை கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : மறக்கடிக்கப்பட்ட மகா கலைஞன் கொத்தமங்கலம் சீனு | கோவில்களில் சினிமா பாட்டு பாட நீதிமன்றம் தடை | சிங்கமுத்து மீதான வழக்கு : வடிவேலு நீதிமன்றத்தில் ஆஜர் |
சென்னை : 'ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும், இது என் பெருமை அல்ல... நாட்டின் பெருமை' என சிம்பொனியை அரங்கேற்ற லண்டன் புறப்பட்ட இளையராஜா சென்னை விமானநிலையத்தில் உறுதி அளித்துள்ளார்.
சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்ட இசைஞானி இளையராஜா சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது : எல்லோருக்கும் வணக்கம். இந்த புதிய சிம்பொனியை, உலகிலேயே தலை சிறந்த இசைக்குழுவுடன் இணைந்து லண்டனில் 8ம் தேதி வெளியிட இருக்கிறோம்.
ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை. உலகிலேயே தலைசிறந்த இசை திருவிழாவாக நடைபெற உள்ளது. நல்ல மனதோடு வந்து இருக்கிறீர்கள். உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துகள். இசை நிகழ்ச்சி சிறப்பாக நடத்த இறைவனை வேண்டி கொள்ளுங்கள். இது என்னுடைய பெருமை அல்ல. நாட்டின் உடைய பெருமை. இந்தியாவின் பெருமை என்றார்
உங்களுடைய பெருமை...!
அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நிருபர்களுக்கு இளையராஜா, 'அனாவசியமான கேள்விகளை என்னிடம் கேட்க கூடாது. நான் என்னுடைய வேலையில் மட்டும் தான் கவனம் செலுத்துகிறேன். நீங்கள் எல்லாம் சேர்ந்து தான் நான். உங்களுடைய பெருமையை தான் அங்க போய் நடத்த போகிறேன். எல்லோருக்கும் வாழ்த்துகள். இறைவன் அருள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்' என தெரிவித்தார்.
அரசியல் தலைவர்கள் வாழ்த்து
சிம்பொனி இசையை இளையராஜா இயற்ற உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின், திருமாவளவன், எல் முருகன், அண்ணாமலை, தமிழிசை சவுந்தர்ராஜன், ஜிகே வாசன், சீமான், செல்வபெருந்தகை போன்ற அரசியல் தலைவர்களும், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரைப்பிபரலங்கள் சில தினங்களாக அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.