பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

'தில்லுமுல்லு' படம் ரஜினியின் காமெடியால் வெற்றி பெற்றதை தொடர்ந்து பஞ்சு அருணாசலம் அதே பாணியில் ரஜினியை காமெடி ஹீரோவாக்கி தயாரித்த படம் 'தம்பிக்கு எந்த ஊரு'. படத்தின் கதை, வசனத்தையும் பஞ்சு அருணாசலமே எழுதினார். ராஜசேகர் இயக்கினார். மாதவி நாயகியாக நடித்திருந்தார்.
ஊதாரித்தனமாக சுற்றுத் திரியும் தன் மகனை பணக்கார தந்தை தனது நண்பன் வீட்டில் தன் அடையாளத்தை மறைத்து ஒரு வருடம் வேலை செய்து காட்டு என்று சவால் விடுவார். அந்த சவாலை ரஜினி எப்படி செய்து முடிக்கிறார் என்பது கதை. இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார். படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டு விட்டது. படத்தில் இடம்பெறும் 5 பாடல்களில் 4 பாடல்கள் ரிக்கார்டிங் முடிந்து படப்பிடிப்பும் முடிந்தது. ஒரு பாடல் பாக்கி உள்ள நிலையில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இளையராஜா. அவருக்கு அறுவை சிகிச்சையும் முடிந்தது. அவரால் அப்போது பேச முடியாத நிலை.
தன்னால் படம் தாமதமாக கூடாது என்று கருதிய இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை மருத்துவமனைக்கு அழைத்து வாயால் விசில் அடித்து பாடலை பாடி காட்டினார். அதைக் கொண்டு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அந்த பாடலை பாடினார். பெண் குரலில் ஜானகி பாடினார். 'காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்...' என்ற பாடல்தான் அது. இப்போது கேட்டாலும் மனதை உருக்கும் காதல் பாடல் அது.




