இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' |
'அன்னக்கிளி' படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா. அவரை இசையமைப்பாளர் ஆக்கியவர் மறைந்த தயாரிப்பாளர், கதாசிரியர் பஞ்சு அருணாசலம். ராஜ்கிரண் நடித்த 'மாணிக்கம்' படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக்ராஜா, 'அரவிந்தன்' படத்தின் யுவன் சங்கர் ராஜாவை இசையமைப்பாளர் ஆக்கியவர் தயாரிப்பாளர் டி.சிவா.
இப்போது கார்த்திக்ராஜா மகன் யத்தீஸ்வர் பக்தி பாடல் இசையமைத்து விட்டார். சினிமாவுக்கு இசையமைக்க ரெடி என்கிறார். அவரை யார் இசையமைப்பாளர் ஆக்கப்போகிறார்கள்? ராஜாவின் பேரன் எப்போது சினிமாவில் என்ட்ரி ஆகப்போகிறார்? என்ற கேள்வி எதிர்பார்ப்புடன் கேட்கப்படுகிறது. இளையராஜா குடும்பத்தில் மறைந்த பவதாரினி, நடிகர் பிரேம்ஜி அமரன் ஆகியோரும் இசையமைப்பாளர்களே. இந்தியளவில் அதிக இசையமைப்பாளர்களை கொண்ட குடும்பம் என்ற பெருமை ராஜாவுக்கு உண்டு.