இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' |
சூர்யா, ஜோதிகா தம்பதியினர் தங்கள் வாரிசுகள் தியா, தேவ் பெயரில் தொடங்கிய பட நிறுவனம் 2டி என்டர்டெயின்மென்ட். இந்த கம்பெனி '36 வயதினிலே, பசங்க 2, மகளிர் மட்டும், 24, சூரரைப்போற்று, கடைக்குட்டி சிங்கம், மெய்யழகன்' உள்ளிட்ட 17 படங்களை தயாரித்தது. சில படங்கள் லாபத்தையும், சில படங்கள் ஏமாற்றத்தையும் தந்தன.
இப்போது இந்த நிறுவனம் சார்பில் படங்கள் தயாரிக்கப்படுவது இல்லை. ஜோதிகா மும்பையில் இருப்பதாலும், சூர்யா நடிப்பில் பிசியாக இருப்பதாலும், சினிமா நிலவரம் மோசமாக இருப்பதாலும் 2டி நிறுவனம் படத்தயாரிப்பு பணிகளை நிறுத்தி வைத்துள்ளது என்று கூறப்படுகிறது. நல்ல கதை அமைந்தால் மீண்டும் படத்தயாரிப்பில் ஈடுபடும் என்கிறார்கள்.
பெரும்பாலும் இந்த நிறுவனம் சூர்யா, கார்த்தி, ஜோதிகா நடித்த படங்களை தயாரித்தது. இப்போது சினிமா பிசினஸ் நிலவரம் மோசமாக இருப்பதால் சொந்த நிறுவனத்தில் படம் தயாரித்து ரிஸ்க் எடுக்க வேண்டாம் என நினைக்கிறார்களாம்.