அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் |
சிம்புவுடன் 'ஈஸ்வரன்', உதயநிதியுடன் 'கலக தலைவன்' படங்களில் நடித்தவர் நிதி அகர்வால். இப்போது பவன் கல்யாண் ஜோடியாக 'ஹரிஹர வீரமல்லு' படத்தில் நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ''நான் மாஸ் ஹீரோயின் ஆக ஆசைப்படுகிறேன். ஆனாலும் லிப்லாக் காட்சியில், நீச்சல் உடை காட்சிகளில், முகம் சுளிக்கும் காட்சிகளில் நடிக்கமாட்டேன். நான் பெற்றோர்களுடன் அமர்ந்து என் படம் பார்க்க விரும்புகிறேன். நல்ல கதைகள், கேரக்டர் அமைந்தால் கவர்ச்சி காட்டாமலும் ஜெயிக்க முடியும்'' என்று கூறியுள்ளார்.
அதே சமயம் 'ஹரிஹர வீரமல்லு, ஈஸ்வரன்' படங்களில் ஓரளவு கவர்ச்சியாக நிதி அகர்வால் டான்ஸ் ஆடியுள்ளார். தற்சமயம் பிரபாஸ் ஜோடியாக 'தி ராஜாசாப்' படத்தில் நடித்து வருகிறார்.. அது ஒரு பேய் படம்.