விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் | நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி | ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார் | 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா? | மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை | மீண்டும் சந்தித்த 'படையப்பா' படை | திரைப்பட பாடலாக உருவான சீமானின் மேடை பாட்டு |

சமீபகாலமாக நடிகைகள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள செல்லும் போது அது குறித்த தகவல்கள் வெளியானதும் அங்கு பெரிய அளவில் ரசிகர்கள் படையெடுக்கிறார்கள். இதனால் நடிகைகள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளும் நிலையில் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு 'தி ராஜா சாப்' என்ற தெலுங்கு படத்தின் இசை விழாவில் கலந்து கொள்ள சென்ற நடிகை நிதி அகர்வால் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டார். அப்போது சில ரசிகர்கள் அவரிடத்தில் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்கள். அது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அதையடுத்து போலீசார் அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இப்படியான நிலையில் நேற்று சமந்தாவும் தெலுங்கனாவில் ஒரு கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரை காண வந்த ரசிகர்கள் செல்பி எடுக்க அவரை சூழ்ந்து கொண்டுள்ளார்கள். ஆனால் அதை தவிர்த்து விட்டு அவர் தனது காரில் ஏறச் சென்றபோது பெரிய அளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.