ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
‛டெர்மினேட்டர், டைட்டானிக்' போன்ற படங்கள் மூலம் ஹாலிவுட்டை மட்டுமல்லாது உலகளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜேம்ஸ் கேமரூன். 2009ல் ‛அவதார்' எனும் படத்தின் மூலம் புதிய உலகத்தை காண்பித்து பிரமிக்க வைத்தார். வசூலிலும் இந்த படம் பட்டையை கிளப்பியது. இதன் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின்றன. ஏற்கனவே அவதார் 2 வான ‛அவதார் தி வே ஆப் வாட்டர்' படம் 2022ல் வெளியானது. முதல்பாகம் அளவுக்கு இல்லையென்றாலும் உலகளவில் வசூலை குவித்தது.
இதன் மூன்றாம் பாகமான ‛அவதார் - தி பயர் அண்ட் ஆஷ்' படம் தற்போது உருவாகி வருகிறது. ஜேம்ஸ் கேமரூன் இயக்குகிறார். முதல் இரு பாகங்களில் நடித்தவர்களே இதிலும் தொடருகிறார்கள். அவதார் 3 படம் இந்தாண்டு டிசம்பர் 19ல் ரிலீஸ் என ஏற்கனவே அறிவித்து இருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் முதல் டிரைலரை வருகிற ஜூலை 25ம் தேதி வெளியிடுகின்றனர். அன்றைய தினம் ஹாலிவுட் படமான ‛தி பென்டாஸ்டிக் 4' உலகளவில் ரிலீஸாகிறது. இந்த படத்தின் இடைவேளையின்போது ‛அவதார் 3' படத்தின் டிரைலரும் வெளியிடப்படுகிறது. மேலும் படத்தின் வில்லனான வராங் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.