பாலிவுட்டை விட்டு விலக முடிவெடுத்த அனுராக் காஷ்யப் | என் பணியை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன் - கஜராஜ் ராவ் | விஷ்ணு விஷாலுக்கு வில்லன் ஆன செல்வராகவன்! | அடுத்த மாதம் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு துவங்குகிறது | ராம்சரண் படத்திற்கு தயாரான சிவராஜ் குமார்! | நாகார்ஜூனா உடன் நடனமாடும் பூஜா ஹெக்டே! | பிளாஷ்பேக் : மோகன் கையில் மைக்கை கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : மறக்கடிக்கப்பட்ட மகா கலைஞன் கொத்தமங்கலம் சீனு | கோவில்களில் சினிமா பாட்டு பாட நீதிமன்றம் தடை | சிங்கமுத்து மீதான வழக்கு : வடிவேலு நீதிமன்றத்தில் ஆஜர் |
பொதுவாகவே எம் ஜி ஆர் திரைப்படங்களில் இடம்பெறும் சண்டைக் காட்சிகள் என்பது சிறியவர், பெரியவர், பெண்கள் என அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் இருப்பதோடு மட்டுமின்றி புதுப்புது உத்திகளையும் கையாண்டு, விறுவிறுப்பான சண்டைக் காட்சிகாளாக்கித் தருவதில் முனைப்பு காட்டுபவர் எம் ஜி ஆர். அதுபோல் சண்டைக் காட்சிகள் இயல்பாக அமைந்தால்தான் ரசிகர்களை எளிதில் கவர முடியும் என்பதிலும் உறுதியாக இருப்பவர் எம் ஜி ஆர். இதற்காக ஸ்டண்ட் மாஸ்டரிடம் தீவிர ஆலோசனை நடத்தி, பின் அவரது யோசனைகளையும் சண்டைக் காட்சி உத்திகளில் கலந்திருக்கும்படி செய்துவிடுவார். எனவே அவரது படங்களில் இடம்பெறும் சண்டைக் காட்சி விஷயங்களில் அவரை அவ்வளவு எளிதில் திருப்திபடுத்திவிட முடியாது.
“இதயக்கனி” திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெற்ற சண்டைக் காட்சியினை சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தில் படமாக்கியிருந்தனர். சுற்றிலும் நாணல் நிறைந்திருக்கும் அந்த நீர்வழிச் சந்தில் படகுகளைப் பயன்படுத்தி அந்த சண்டைக் காட்சியை அமைத்திருப்பர். ஐந்து நாட்களுக்குள் படத்தின் கிளைமாக்ஸ் முழுவதையும் எடுத்துவிட திட்டமிட்டு, முதல் நாள் எம் ஜி ஆர் நடிக்க இருந்த சண்டைக் காட்சியை எடுக்க ஆரம்பித்தனர். அப்போது எம் ஜி ஆர் அரசியலில் தீவிரமாக இருந்த நேரம். உடனே டில்லி சென்று பிரதமரை சந்திக்க வேண்டிய இக்கட்டான நிலையிலிருந்த எம் ஜி ஆர், தான் வருகின்ற காட்சிகளை மட்டும் நாளை மாலைக்குள் எடுத்து முடித்து விடு என்று இயக்குநர் ஏ ஜகந்நாதனிடம் எம் ஜி ஆர் கேட்டுக் கொண்டார்.
ஐந்து நாள் படப்பிடிப்பை அதுவும் கிளைமாக்ஸ் காட்சியை எப்படி இரண்டு நாளில் முடிப்பது? என்ற திகைப்பில் இருந்த இயக்குநர் ஏ ஜகந்நாதனின் நிலைமையை புரிந்து கொண்ட எம் ஜி ஆர், அவர் வருகின்ற காட்சிகளை மட்டும் முதலில் எடுத்துவிடும்படி கூற, அப்போதும் தயக்கம் காட்டிக் கொண்டிருந்தார் இயக்குநர் ஏ ஜகந்நாதன். காரணம் அவர் வரும் காட்சிகளில் வில்லனை சுடுவது, வில்லன் இவரை சுடுவது, அதிலிருந்து இவர் தப்பிப்பது, போட் சேஸிங்கில் இவர் வில்லன் கையைப் பிடித்து இழுப்பது என நிறைய ரிஸ்க்கான காட்சிகள் இருந்தன. ஒரு நாளைக்குள் அவர் வருகின்ற இத்தனைக் காட்சிகளையும் எடுத்து முடிப்பது என்பது மிகச் சிரமமான ஒன்று என்றாலும் எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது படக்குழு.
மறுநாள் காலையில் ஆரம்பித்த படப்பிடிப்பு மதிய சாப்பாட்டுக்கு கூட யாரும் செல்லாமல் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்ததைக் கவனித்த எம் ஜி ஆர், ஒரு வேன் நிறைய பிஸ்கட்டும், குளிர் பானங்களும் வரவழைத்திருந்தார். கிடைக்கின்ற சிறிய இடைவெளியில் படக்குழுவினர் அனைவருக்கும் அதுதான் அன்று பசியாற்றியது. இடைவிடாமல் திருப்தியாக நடந்த படப்பிடிப்பு அன்று மாலை நான்கு மணிக்கெல்லாம் முடிவடைந்தது. டில்லி சென்று திரும்பியதும் ஏதாவது பெண்டிங் இருந்தால் முடித்துத் தருகின்றேன் என்று சொல்லி எம் ஜி ஆரும் டில்லிக்கு புறப்பட்டார்.
அதன் பின் “நவரத்தினம்” படப்பிடிப்பில் இருந்த எம் ஜி ஆரை சந்தித்து, எடுத்திருந்த “இதயக்கனி” திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை ஏ பி என் தியேட்டரில் திரையிட்டுக் காட்ட, பார்த்த அனைவரும் எம் ஜி ஆரையும், இயக்குநர் ஏ ஜகந்நாதனையும் பாராட்டினர். எம் ஜி ஆர் இயக்குநர் ஏ ஜகந்நாதனை ஆரத்தழுவி பாராட்டினார். “இதயக்கனி” திரைப்படத்தின் இறுதிக்கட்ட சண்டைக் காட்சியினை பார்த்து ரசித்த நம்மில் பலருக்கு அதன் பின்னணியில் இத்தனை சிரமங்கள் இருந்திருக்கின்றன என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.