மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண், கியாரா அத்வானி நடிப்பில் உருவான 'கேம் சேஞ்ஜர்' படம் கடந்த மாதம் வெளியானது. பல வருடங்களாக நடந்த இந்த படத்தின் படப்பிடிப்பில் தினமும் ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் நடித்தனர். பாடல் காட்சிகளிலும் ஆயிரக்கணக்கான நடன கலைஞர்கள் பணியாற்றினார்கள். மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்தநிலையில் கேம் சேஞ்ஜர் படத்தில் நடித்த துணை நடிகர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என 350 துணை நடிகர்கள் குண்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரு பாடல் காட்சிக்காக 350 துணை நடிகர்களை இணை இயக்குனர் ஒருவர் ஏற்பாடு செய்ததாகவும், படப்பிடிப்பு முடிந்தவுடன் ஒவ்வொருவருக்கும் 1200 சம்பளம் தரப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்ததாகவும், அதனை தராமல் ஏமாற்றி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்த பின்னர் சம்பளம் வழங்கப்படாததால், பலமுறை கேட்டும் எந்த பதிலும் இல்லை. இதனால், அவர்கள் அனைவரும் குண்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
துணை நடிகர்களுக்கான சம்பளம் சம்பந்தபட்ட ஏஜெண்டு மூலம் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டதாகவும். இது அந்த ஏஜெண்டுக்கும், துணை நடிகர்களுக்குமான பிரச்னை என்றும், இதற்கும் படத்தின் தயாரிப்பாளருக்கும் சம்பந்தம் இல்லை என்றும் தயாரிப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த புகார் வழக்காக மாறுமானால் இதுகுறித்து விளக்கம் அளிக்க தயாரிப்பு தரப்பு தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.