சிம்பு 49வது படத்தில் இணைந்த சந்தானம் | ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருந்த அந்நியன் ஹிந்தி ரீமேக் டிராப்பா... | ஸ்ரீ லீலாவை பின்தொடரும் 11 மில்லியன் பேர் : இரண்டே மாதங்களில் 2 மில்லியன் அதிகரிப்பு | சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்த ஜோதிகா | ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஜூனியர் என்டிஆர் படம் | அசோக் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்? | விமல் நடிப்பில் 'ஓம் காளி ஜெய் காளி' | பிரபாஸிற்கு ஜோடியாகும் பாக்யஸ்ரீ போஸ் | மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்க மறுத்த ஜீவா | ஆர்.டி.எக்ஸ் இயக்குனருடன் இணைந்த துல்கர் சல்மான் |
அமரன் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஒரு பக்கம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்கிற படத்திலும், இன்னொரு பக்கம் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்கிற படத்திலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த இரண்டு படங்களின் மீதான எதிர்பார்ப்பு அமரன் படத்தின் வெற்றியால் அதிகமாக இருக்கிறது.
சமீபத்தில் தான் ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு மதராசி என டைட்டில் வைக்கப்பட்டது. இது ஏற்கனவே அர்ஜுன் நடித்த படத்தின் டைட்டில் தான். ஆனால் தங்களது கதைக்கு பொருத்தமாக இருக்கிறது என்பதால் இந்த டைட்டிலை கேட்டு பெற்று வைத்துள்ளார்கள்.
அதே சமயம் இந்த டைட்டில் வைப்பதற்கு முன்பாக இவர்கள் தங்களது படத்திற்கு ஹண்ட்டர் என ஆங்கிலத்தில் டைட்டில் வைப்பதாகத்தான் திட்டமிட்டு இருந்தார்களாம். ஆனால் அந்த சமயத்தில் தான் ரஜினிகாந்த் நடித்த படத்திற்கு வேட்டையன் என்கிற டைட்டில் வைக்கப்பட்டு அந்த படமும் வெளியானது.
அதன்பிறகு அதே அர்த்தம் தரக்கூடிய ஹண்ட்டர் என்கிற டைட்டிலுடன் தங்களது படம் வெளியானால் அது ரஜினிகாந்த்திற்கு சங்கடம் தரக்கூடியதாக இருக்கும் என்பதாலும், ரஜினி மீது இவர்கள் இருவருமே அதிகம் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர்கள் என்பதாலும் இந்த படத்திற்கு வேறு டைட்டிலை மாற்றலாம் என முடிவு செய்த போது தான் இந்த மதராஸி டைட்டில் பொருத்தமாக கிடைத்தது என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.